திருவேடகத்தில், கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு:

தமிழக முன்னாள் முதலமைச்சர்,திமுக தலைவருமான, கருணாநிதி மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திருவேடகத்தில் உள்ள தர்காவில் பாத்தியா ஓதப்பட்டு ஆதரவற்றவர்களுக்கு சேலை,வேட்டி மற்றும் பிரியாணி வழங்கப்பட்டது.இதில், கலந்துகொண்ட வெங்கடேசன் எம்.எல்.ஏ. கருணாநிதி திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். இதைத் தொடர்ந்து, தர்காவில் பார்த்தியா ஓதப்பட்டது. இங்குள்ள ஆதரவற்றவர்களுக்கு வேட்டி,சேலை மற்றும் பிரியாணி பொட்டலங்கள் வழங்கினார். இதில், சிபிஆர் சரவணன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜா என்ற பெரியகருப்பன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன்,அண்ணாதுரை, ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ராஜா நீலமேகம், ஊத்துக்குளி ராஜாராம் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் செல்லப்பாண்டி,ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள், வார்டு கவுன்சிலர் லிங்கராணி மாவட்ட பிரதிநிதி கண்ணன், பொதும்பு ஊராட்சி மன்ற தலைவர் தனசேகரன், திருவேடகம் நிர்வாகிகள் செல்வராஜ், முத்துவேல், மேலக்கால் ஒன்றிய கவுன்சிலர் சுப்ரமணி, சோழவந்தான் தொழில் நுட்ப அணி நகர அமைப்பாளர் பார்த்திபன், மகளிர் அணி நகர அமைப்பாளர் சசிகலா தேவி, சக்கரவர்த்தி, தூத்துக்குடி சண்முகம் உட்பட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர். இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் வெங்கடேசன் எம்.எல்.ஏ. விடம் குறைகளை எடுத்துக் கூறினார்கள்.இதைக் கனிவுடன் கேட்டு ,வெங்கடேசன் எம்எல்ஏ உடனே நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!