கல்லூரி மாணவி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு சாவில் மர்மம் போலீஸ் விசாரணை.

மதுரை மாவட்டம் திருமங்கலம் மறவன்குளம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் இவருடைய மகள் கார்த்திகா வயது 20 இவர் B.Comபடித்துள்ளார். நேற்று மாலை 5 மணியளவில் கார்த்திகா தனது வீட்டின் குளியலறையில் தீயில் கருகிய நிலையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டு தடயவியல் துறையினரை வரவழைத்து திருமங்கலம் நகர் போலீசார் திருமங்கலம் துணை கண்காணிப்பாளர் வினோதினி சடலம் கிடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார் .சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸ் இச்சம்பவம் குறித்து கார்த்திகாவின் தாயார் மற்றும் தந்தை கண்ணனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!