மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை , கொண்டு ரெட்டி பட்டி கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.கொண்டு ரெட்டிப்பட்டி கிராமத்தில் விவசாயிகள் பட்டா பெற்ற நிலத்தை, நில அளவையர் பெருமாள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் , பிறருக்கு போலி பட்டா தயாரித்து லட்சக்கணக்கான ரூபாய் லாபம் ஈட்டி வருவதை, அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் , பாதிக்கப்பட்ட விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் .இதனைத்தொடர்ந்து வட்டாட்சியர்.ஆனந்த கிருஷ்ணன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி , உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.இதேபோன்று வாகைகுளம் கிராமத்தில் விவசாயி அழகுமலை என்பவரது வீட்டின் முன்பு உள்ள3 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்தை பொதுப்பாதையாக பயன்படுத்தி வந்த நிலையில் ,அந்த மூன்று சென்ட் நிலத்தையும் பிறருக்கு பத்திரப்பதிவு செய்து அதிலும் , நில அளவையர் பெருமாள் மோசடி செய்துள்ளதாக அழகுமலை , வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.