கொள்முதல் செய்யப்படாத நெல், வேதனையில் விவசாயிகள்.

திருப்பரங்குன்றம் அருகில் உள்ளது விளாச்சேரி இங்குள்ள நெல் கொள்முதல் நிலையம் மூலம் இப்பகுதி விவசாயிகளிடம் இருந்து நேரடியாக களத்தில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள விவ்சாயிகள் கடந்த மூன்று மாதமாக கடும் சிரமப்பட்டு நெல்லை விளைவித்து அதை பத்திரமாக களத்திற்க்கு கொண்டு வந்து சேர்த்து அதிகாரிகளின் வருகைக்காக காத்து கிடக்கின்றனர். விளாச்சேரி பேருந்து நிலையம் அருகிலுள்ள நாடகமேடைக்கு முன்பு உள்ள களத்தில் இப்பகுதியை சேர்ந்த சுமார் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்த நெல்களை குவியல் குவியலாக கொட்டி வைத்துள்ளனர். இந்த களத்தில் சுமார் 2000 மூடைகள் நெல் எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் கொட்டி கிடக்கிறது. இதன் மதிப்பு சுமார் 25 லட்சம் ரூபாய் என தெரிகிறது.இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக இந்த இடத்தில் நெல்களை கொட்டி வைத்துள்ளோம் அதிகாரிகள் வந்து பார்வையிட்டு சென்று ஒரு வாரத்திற்கு மேலாக ஆன நிலையிலும் இதுவரை கொள்முதல் செய்ய வரவில்லை. இது குறித்து அதிகாரிகளை பலமுறை தொடர்பு கொண்டும் முறையான பதில் இல்லை. மேலும் இதில் ஏஜனட்களுக்கு இடையேயான போட்டியும் அதிகாரிகள் நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுவதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதே நிலை நீடித்து அதிகாரிகள் கொள்முதல் செய்ய தாமதம் ஏற்பட்டு மழை வந்தால் நிலைமை மோசமாகி அனைத்து நெல்களும் வீணாகி விடும் எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுத்து விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என கூறினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!