இராஜசிங்கமங்கலம் பேரூராட்சியில் அம்மா உணவகம் அமைத்து தர முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு கோரிக்கை.

இராஜசிங்கமங்கலம் பேரூராட்சியில் அம்மா உணவகம் அமைத்து தர மக்கள் பாதை நூருல் அமீன், ஆசிரியர் பாதுஷா ஆகியோர் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆசிரியர் பாதுஷா கூறியதாவது: இராஜசிங்கமங்கலம் பேரூராட்சி தற்பொழுது தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.இராஜசிங்கமங்கலத்தைச் சுற்றி பல்வேறு கிராமங்கள் உள்ளது. ஏழை எளிய மக்கள் , கூலி தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் குறைந்த செலவில் செயல்படும் அம்மா உணவகத்தை இராஜசிங்கமங்கலத்தில் துவங்கி பொதுமக்கள் பயன்பெற அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!