பத்திரிக்கை அலுவலகத்தில் தலைமையாசிரியருக்கு பாராட்டு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் செயல்பாடுகளை பாராட்டி பள்ளி தலைமை ஆசிரியருக்கு பத்திரிக்கை அலுவலகத்தில் பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்தவாவது :மதுரை அலுவலக பத்திரிக்கையின் பொது மேலாளர் தீனதயாளன்  சந்தித்து நன்றி சொல்வதற்காக மதுரை அலுவலகத்துக்கு தற்செயலாக சென்று இருந்தேன்.அப்போது எனக்கு இன்ப அதிர்ச்சி காத்து இருந்தது.பொது மேலாளர் என்னை அலுவலகத்தின் வாசலில் வந்து வரவேற்று,அன்புடன் உபசரித்து ,அலுவலகத்தை முழுவதுமாக சுற்றி காண்பித்து என்னை வியப்பில் ஆழ்த்தினார்.மேலும் அலுவலக செய்தி பிரிவு ஞானசேகர் , சர்குலேஷன் பிரிவு இளங்கோ ஆகியோர் உட்பட அனைத்து அலுவலர்களையும் அழைத்து எனது பணி தொடர்பான விவரங்களை சொல்லி பாராட்டு தெரிவித்தனர்.பொது மேலாளர் தீனதயாளன் பேசும்போது, மாணவர்களுக்கு பல்வேறு வகையான வாழ்க்கைக்கான கல்வியை வழங்கி வருவதுடன் ஆளுமைகளுடன் கலந்துரையாட செய்து அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தூண்டுகோளாக இருக்கும் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கத்துக்கும், உடன் துணை நிற்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் ,நிர்வாகத்துக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்வதாக கூறி பொன்னாடை அணிவித்து பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

இந்த நிகழ்வு எனக்கு மிகவும் உற்சாகத்தை கொடுத்தது.தீனதயாளன்  என்னிடம் அன்புடன் பழகி,இயல்பாக இருந்து மீண்டும் என்னை பேருந்து நிறுத்தும் வரை அன்புடன் வந்து வழி அனுப்பி வைத்தார்கள்.இங்கு குறிப்பிட தக்க விஷயம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை அலுவலகத்துக்கு சென்றபோது, மூத்த பத்திரிகையாளர் ராம் ஜீ  என்னுடன் அன்பாக பழகியதுடன், அவர்களது பத்திரிக்கை செய்தி ஆசிரியர் முத்துக்குமார் அவர்களை அறிமுகம் செய்து என்னை அன்புடன் வழியனுப்பி வைத்தார்.தற்போது மதுரை அலுவலக பொது மேலாளர் அவர்களது அலுவகத்தில் அனைவரையும் அறிமுகப்படுத்தி என்னை பாராட்டியது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.அனைவருக்கும் நன்றிகள் பல.இவ்வாறு லெ .சொக்கலிங்கம் தெரிவித்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!