தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு விசைத்தறி பூங்கா அமைக்கும் என தேர்தல் வாக்குறுதி அளித்தது விரைவில் அமைக்க வேண்டும் அப்படி அமையவில்லை என்றால் அதற்கான அழுத்தத்தை சிஐடியு சார்பில் கொடுக்கப்படும் என மாநில தலைவர் பேட்டி .

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி பகுதியில் தமிழ்நாடு சிஐடியூ விசைத்தறி தொழிலாளர்கள் சங்க மாநில சம்மேளன குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் சிஐடியு மாநில பொதுச் செயலாளர் சுகுமாரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் புதிதாக அமைந்துள்ள தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகள் விசைத்தறி தொழிலாளர்களுக்கு விசைத்தறி பூங்கா அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தது அதை நிறைவேற்றும் என நம்புகிறோம் அப்படி நிறைவேற்றாவிட்டால் சிஐடியு சார்பில் அதற்கான அழுத்தங்கள் கொடுக்கப்படும் என தெரிவித்தார்7 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் தமிழகத்தில் உள்ளனர் அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்தொழிலாளர் நலச்சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் பொதுத்துறை பங்குகளை திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சாரம் செய்யப்படுகின்றன ஆகஸ்ட் 9ம் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவங்கிய நாள் அன்று சிஐடியு விவசாய சங்கம் விவசாய தொழிலாளர் சங்கம் அனைத்து தொழிற்சங்கங்களும் சேர்ந்து தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது மனிதச் சங்கிலி போராட்டத்தில் இறுதியாக அரசனுடைய சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற உள்ளதுதமிழக அரசு திமுக அரசு அறிவித்துள்ளது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் ஒரு டிரைலர் தான் மெயின் படம் இனிமேல் தான் என்று அதை நாங்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றோம்திராவிட முன்னேற்றக் கழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்களுடைய வேண்டுகோள்

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!