வடமாநிலத்தை போன்று கீழடியில் அகழாய்வில் கிடைத்தவைகள் கொண்டு தமிழகத்தில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க வரும் நிதி நிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீட வேண்டும் என மதுரை எம்பி தமிழக முதல்வருக்கு கடிதம் .

ஒன்றிய அரசின் தொல்லியல் துறை நாளந்தா, சாரநாத், லோத்தல், தொளவீரா, அமராவதி ஆகிய பகுதிகளில் நடத்திய அகழாய்வுகளை அனைவருக்கும் காட்சிப்படுத்தும் வகையில் திறந்தவெளி அருங்காட்சியகங்களை அமைத்துள்ளது.அதைப்போன்று தமிழக அரசும் கீழடி மற்றும் சிவகலை பகுதியை சங்ககால வாழ்விடப் பகுதியாக அறிவித்து திறந்தவெளி அருங்காட்சியங்களை உருவாக்க வேண்டும்.அகழாய்வு குழிகள் காலத்தின் கண்ணாடி போன்றது. அதன் கண்டுபிடிப்புகளை இருப்பிடம் விட்டு அகலாமல் காட்சிப்படுத்துவது வரலாற்று துறைக்கு செய்யும் நேர்மையான பங்களிப்பாகும்.அந்த வகையில் கீழடி மற்றும் சிவகலையில் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்க வரும் நிதிநிலை அறிக்கையில் கூடுதல் நிதியினை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!