மதுரையில் துப்புரவு பணியாளர்களின் குழந்தைகளுக்கு இலவசமாக மாலை நேர வகுப்புகள் – கற்றவைகளை பற்றவைக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு பெற்றோர்கள் ஆதரவு.

மதுரை மாநகர் பகுதியில் உள்ள சுப்பிரமணியபுரத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளது. இங்குள்ள வீடுகளில் பெரும்பாலோனோர் துப்புரவு பணியாளர்களாக இருந்து வருகின்றனர்.குறிப்பாக இந்த பகுதியில் உள்ளவர்கள் பெரும்பாலோனோர் பள்ளி படிப்பை முடிக்காமல் இருந்து வரும்நிலையில், சில இளைஞர்கள் படித்து பட்டம் பெற்று தகுந்த அரசு வேலைக்காக முயற்சி செய்தும் வருகின்றனர்.இந்தநிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்காமல் உள்ளது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் வீட்டில் முடங்கியும், ஆன்லைன் விளையாட்டில் மூழ்கியும் உள்ளனர்.இதனால் தொடர்ந்து அவர்களின் கல்வி முற்றிலும் மறந்து கட்டாய கல்வி குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருந்தும், கல்வி கற்பதை மறந்தும் இருந்து வந்துள்ளனர்.இதனை அறிந்த அப்பகுதி பட்டதாரி இளைஞர்கள் சிலர் இங்குள்ள பெற்றோர்களிடம் முறையிட்டு அவர்களின் குழந்தைகளுக்கு இலவசமாக மாலை நேர வகுப்புகளை எடுக்க முன்வந்துள்ளனர்.மேலும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக தங்கள் பகுதியில் ஓர் நூலகம் அமைக்க தற்போதைய இந்த தொகுதியின் நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் முன்வரவேண்டும் என கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.தங்கள் பகுதியில் வாழும் ஏழை எளிய குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக மாலை நேர வகுப்புகள் எடுக்க முன்வந்துள்ள பட்டதாரி இளைஞர்களுக்கு அப்பகுதி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவுஎன்கிற திருக்குறளுக்கு இணங்க தான் கற்றவைகளை தான் வசிக்கும் பகுதியில் உள்ள சிறுவர் சிறுமியர்களுக்கு கற்பிக்க முன்வந்திருப்பது பாராட்டிற்குரியது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!