மதுரை அருகே ரேஷன் அரிசி மற்றும் கோதுமை மூடைகளை பதுக்கி வைத்திருந்த குடோன் உரிமையாளர் கைது .

மதுரை அருகே ஐராவதநல்லூர் சுண்ணாம்புக் காளவாசல் பின்புறம் உள்ள ஒரு குடோனில் ரேஷன் அரிசி மற்றும் கோதுமை மூடைகளை கடத்தி வைத்திருப்பதாக, குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து போலீசார் அந்த குடோனில் சோதனை செய்தனர். அப்போது அங்கு 319 மூடைகளில் இருந்த 15. 95 டன் ரேஷன் அரிசி மற்றும் 92 மூடைகளில் 4.6 டன் கோதுமையையும் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த குடோன் உரிமையாளரான முத்து என்ற கொரில்லா முத்து கைது செய்யப்பட்டார்.மேலும் இவர் உசிலம்பட்டி பகுதிகளில் உள்ள ரேஷன் கடைக்காரர்களிடம் இருந்து இந்த ரேஷன் அரிசி மற்றும் கோதுமையை வாங்கிவந்து திருட்டுத்தனமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து ரேஷன் கடை விற்பனையாளர்களான மகாராஜன், மணி, பழனி, ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரனை செய்யப்பட்டு வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!