மதுரையில் ஆலமரத்திற்கு 102வது பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய பொதுமக்கள்: நாட்டுமரங்களை பாதுகாக்க வலியுறுத்தி சிறுவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது:

மதுரை மீனாட்சிபுரம் கண்மாய்கரை பகுதியில் 7-க்கும் மேற்பட்ட ஆலமரங்கள் வளர்ந்திருந்த நிலையில், ஒவ்வொரு ஆலமரங்களும் முறையாக பராமரிக்காத நிலையில் 6 மரங்களும் காய்ந்துபோன நிலையில், மீதியுள்ள ஒரே ஒரு ஆலமரமானது நூற்றாண்டை கடந்தும் இருந்து வருகிறது.இந்நிலையில், நூற்றாண்டு கடந்த ஆலமரத்தை பாதுகாக்க கோரி, அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து ஆண்டுதோறும், பிறந்தநாள் விழா கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில், மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஆலமரத்தின் 102-வது பிறந்தாளை முன்னிட்டு, இன்று அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் நீர் நிலை இயக்கத்தை சேர்ந்த, சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கேக்வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.இதனையடுத்து, நாட்டிடன மரங்களை பாதுகாக்கும் வகையில், சிறுவர்களுக்கு ஆலமரக் கன்றுகளை வழங்கி அதனை, கண்மாய் கரைகளில் நடவைத்தனர்.மனிதர்களின் ஆயுளை நீட்டிக்க செய்யும் ஆக்சிஜனை வழங்கும் ஆலமரத்திற்கு மனிதர்களை போன்று பிறந்தநாள் கொண்டாடிய மதுரை மக்களின் மனங்களுக்கு பாராட்டுதல்கள் குவிந்து வருகிறது.மரங்களின் தேவை குறித்து வருங்கால சந்ததியினருக்கு உணர்த்தும் வகையிலும், நாட்டு இன மரங்களை பாதுகாக்க வலியுறுத்தியும், இது போன்ற பிறந்தநாள் கொண்டாடியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!