காவலர்களுக்கான மாநில திறனாய்வு போட்டிகளில் பதக்கம் மற்றும் கேடயம் வென்ற காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு

63 வது ஆண்டு தமிழ்நாடு காவல்துறை சார்பாக கடந்த 21.09.2019 முதல் 29.09.2019 வரை சென்னையில் POLICE ACADEMY காவலர் பயிற்சிப்பள்ளியில், காவலர்களுக்கான திறனாய்வு போட்டிகள் நடைபெற்றன.இப்போட்டியில் மதுரை மாநகர காவல்துறை சார்பாக, போக்குவரத்து புலனாய்வு பிரிவு தலைமை காவலர் கருணாகரன், ஆயுதப்படை காவலர் விக்னேஷ்வரன் மற்றும் நுண்ணரிவுப்பிரிவு தலைமை காவலர் பாண்டிசாமி ஆகியோர் வீடியோகிராபி பிரிவில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்து கேடயம் வென்றனர்.வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு போட்டியில்  அவனியாபுரம் காவல் நிலைய முதல்நிலை காவலர் சுரேஷ்குமார் மற்றும் ஆயுதப்படை காவலர் .கணேஷ்குமார் ஆகிய இருவரும் கலந்துகொண்டு வெள்ளிப்பதக்கமும் பெற்றனர்.இவர்களை  மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், நேரில் அழைத்து பாராட்டினார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!