மனிதநேயமிக்க சுகாதார அலுவலர் வேலூர் சிவக்குமார்.

வேலூர் மாநகராட்சியின் 2-வது மண்டல சுகாதார அலுவலராக இருப்பவர் சிவக்குமார். சுகாதாரம் மற்றும் கோவிட் 19 தொற்று தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டு வருவது வேலூர் மாநகரத்திற்கு தெரியும். இந்த நிலையில் இன்று காலை வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் 55 வயது மதிக்கதக்க பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதை கவனித்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த பேருந்துநிலையத்தில் இதுபோன்று ஆதரவற்றவர்கள் யாராவது இருந்தால் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கும்படி தன்னுடைய பணியாளர்களிடம் கூறினார். அரசு அதிகாரிகளில் யாரோ சிலர் இதுப்போன்று இருக்கத்தான் செய்கிறார்கள்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!