மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் அசாமில் பணியில் இருந்தபோது நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி இவரது மகன் கதிர்வேல் (வயது 36) இவருக்கு திருமணமாகி சண்முகப்பிரியா(வயது 25)என்ற மனைவியும் .ஹனிஸ்க் (வயது 7)மற்றும் பார்த்திவ் (வயது 3) ஆகிய 2 மகன்கள் உள்ளனர் . கதிர்வேல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அசாமில் மழையில் பணியில் இருந்தபோது ஏற்பட்ட நிலச்சரிவில் கதிர்வேல் மரணமடைந்தார்.இதுகுறித்து தகவலறிந்து வந்த ராணுவ அதிகாரிகள் அவரது உடலை மீட்டு அசாம் தலைமையகத்துக்கொண்டு செலுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.அவரது உடல் இன்று இண்டிகோ விமானம் மூலம் இரவு எட்டு முப்பது மணி அளவில் மதுரை வந்தடைகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!