மதுரையில் பிரதான குடிநீர் குழாய் உடைப்பு ஆறுபோல காட்சியளிக்கும் சாலை

மதுரை முடக்குசாலை பகுதியில் வைகையிலிருந்து அரசரடி நீரேற்றும் நிலையத்திற்கு கொண்டுவரப்படும் மெயின் குழாயில் இன்று காலை ஏற்பட்ட உடைப்பு காரணமாக குடிநீர் சாலையில் ஆறுபோல சாலை வீணாக செல்கிறது. 4மணி நேரத்திற்கு மேலாக லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக சென்றுகொண்டிருக்கிறது. மாநகராட்சிக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் தாமதமாக வருகை தந்த்தால் பல லட்சக்கணக்கான தண்ணீர் தொடர்ந்து வெளியேறி வீணாகிவருகிறது. பிரமாண்ட குழாய் என்பதால் சீர்செய்வதில் கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் செய்வதறியாமல் தலைஅளவு தண்ணீரில் மூழ்கியபடி எந்தவித பாதுகாப்பு உபகரணம் இன்றி பணியாற்றிவருகின்றனர்.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி பாபு.  கேட்டபொழுது உயர் அழுத்தம் காரணமாகவே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்தார் இதனால் குடிநீர் வினியோகம் எந்த வகையிலும் பாதிக்காது எனவும் தொடர்ந்து குடிநீர் விநியோகம் நடந்து கொண்டிருப்பதாகவும் தேங்கியுள்ள நீரை விரைவாக அகற்றி விடுவோம் மேலும் உடைந்த குழாயினை மாநகராட்சி ஊழியர்கள் சரி செய்து வருகிறார்கள் என தெரிவித்தார் இன்று மாலைக்குள் நீர் முழுவதும் அகற்றப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என அவர் நம்மிடம் தகவல் தெரிவித்தார்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!