டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ்வழி கல்வி பயின்றவர்களுக்கு 20% ஒதுக்கீடு : உயர்நீதிமன்றம் உத்தரவு.

கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி சார்பில் வெளியிடப்பட்ட குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவில் இருந்து, 1 முதல் பட்டபடிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20 சதவீத ஒதுக்கீட்டின் படி தேர்வு செய்து, நியமனம் செய்ய உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானையம் சார்பில் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வில் உயர்நீதிமன்றம் உத்தரவின் படி 1 முதல் பட்டபடிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களை மட்டும் தான் 20 சதவீத ஒதுக்கீட்டில் தேர்வு செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு உத்தரவிட்டனர்.இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி சார்பில் வெளியிடப்பட்ட குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவு வெளியானது. இந்த தேர்வில் மட்டும் 1 முதல் பட்டபடிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களை மட்டும் தான் 20 சதவீத ஒதுக்கீட்டில் தேர்வு செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கு விலக்கு அளிக்க வேண்டும். ஏற்எனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. எனவே விலக்கு அளிக்க வேண்டும் என மனுவில் கூறி யிருந்தனர். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், ஜனவரி 2020, குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. எனவே இந்த ஒரு குரூப் 1 தேர்வுக்கு மட்டும் இந்த உத்தரவை செயல்படுத்த விலக்கு அளிக்க வேண்டும் என வாதிட்டார்.இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், +2 வரை ஆங்கிலவழியில் படித்து விட்டு, பட்டபடிப்பு மட்டும் வேலைக்காக தமிழ் வழியில் படித்தவர்கள் வரலாமாமதுரை காமராஜர் பல்கலை கழகம் உள்ளிட்ட பல்கலைகழகங்களில் பட்டபடிப்பை தமிழ் வழியில் படித்ததற்கு முறைகேடாக, விதி மீறி சான்றிதழ் பெற்று உள்ளனர். என கருத்து தெரிவித்த நீதிபதிகள், TNPSC யின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர் ..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!