முருகனின் அறுபடைவீடுகளின் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் வருடந்தோறும் ஆடி மாத பௌர்ணமி கிரிவலம் நிகழ்ச்சி வெகுவிமர்சியாக நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து, கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதனாலும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாகவும் ஜூலை மாதம் 23ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த ஆடி மாத பௌர்ணமி கிரிவல நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகவும், ரத்து செய்யப்பட்ட நாளில் பக்தர்கள் கிரிவலம் வருவதை தவிர்க்கமாறு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது…!!!
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.