தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்த தமிழக அரசு கூறியதை அரசு அதிகாரிகள் ஏற்க வேண்டும், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த கைத்தறி நெசவாளர்கள்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட நிலையூர் அருகே உள்ள கைத்தறி நகர் பகுதியில் வசிக்கக்கூடிய 5000 மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் நேற்று கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்ய கூடிய ஆடைகளை அரசு அதிகாரிகள் வாரத்திற்கு இரண்டு முறை அணியலாம் என கூறியதை வரவேற்கும் விதமாக இப்பகுதி மக்கள் முதல்வருக்கு தங்களது வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துள்ளனர்.மேலும் இது குறித்து கைத்தறி நெசவாளர்கள் தெரிவிக்கையில்.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றல் கைத்தறிநெசவு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்., ஏற்கனவே உற்பத்தி செய்து வைத்திருக்கக்கூடிய ஆடைகள் அனைத்தும் தேங்கியுள்ளது.தற்போது., முதல்வர் முக ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி அரசு அதிகாரிகள், MLA-க்கள், அமைச்சர் பெருமக்கள் அனைவரும் வாரத்திற்கு இரண்டு முறை கைத்தறி நெசவு ஆடைகள் அணிவதனால் தங்களது வாழ்வாதாரம் மேம்படும்.வெயில் காலங்களில் கைத்தறி ஆடைகள் அணிவதன் மூலம் உடலுக்கு எவ்வித இடையூறும் வராது என தெரிவிக்கின்றனர். எனவே., முதல்வர் கூறியதை வரவேற்பதாகவும், கைத்தறி நெசவாளர் நிலையறிந்து கூறிய முதல்வருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளனர்

. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!