விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜர் சிலைக்கு 119 வது பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சரும், அதிமுக வின் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் கே.டி ராஜேந்திர பாலாஜி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். உடன் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் துரை முருகேசன், நகர செயலாளர் ராணா பாஸ்கர்ராஜ் மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் உட்பட அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தேர்தல் முடிந்து திமுக ஆட்சி அமைந்த பின்பு அதிமுக சார்பில் முதல் பொது நிகழ்ச்சியாக பெருத்தலைவர் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி அதே உற்சாகத்துடன் தொண்டர்கள் படை சூழ காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே அதிமுக தொண்டர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதுமேலும் நிகழ்வினை தொடர்ந்து அமமுக கட்சியிலிருந்து விலகி ஒன்றிய செயலாளர் ஜான்சன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி அவர்களின் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்


You must be logged in to post a comment.