திருமங்கலம் பேருந்து நிலையத்தில் நீதிமன்ற பணியாளரிடம் பிக்பாக்கெட் அடித்த பெண்ணை திருமங்கலம் நகர் போலீசார் கைது செய்து விசாரணை.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் நீதிமன்ற பணியாளரிடம் பிக்பாக்கெட் அடித்த பெண்ணை திருமங்கலம் நகர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள டி.வலையங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மகள் பாலாமணி(25). இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ர பர்சனல் அசிஸ்டெண்டாக பணிபுரிந்து வருகிறார்.தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திருமங்கலம் மருத்துவமனைக்கு வருவதற்காக டி.கொக்குளம் பேருந்தில் ஏறி திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் வந்து இறங்கும் போது கூட்ட நெரிசலில் கட்ட பையில் வைத்திருந்த தனது பர்சை திருடிய பெண்ணை அக்கம்பக்கத்தினர் பார்த்து கூச்சலிட்ட பின் அந்தப் பெண்ணை பிடித்து திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் மதுரை வண்டியூரை சேர்ந்த அழகர் மனைவி முனியம்மாள்(43) என்பது தெரியவந்தது.மேலும் அவரிடம் இருந்து பர்சில் இருந்த ரூபாய் 750 பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் பிக்பாக்கெட் அடித்த பெண்ணை எஸ்.ஐ., கோபிநாத் மற்றும் பொதுமக்கள் விரட்டிச் சென்று பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!