மதுரை மாவட்டம் அடுத்து உள்ள தனக்கன்குளம் கிராமத்தில் உள்ள மொட்ட மலை இன்று காலை அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு ஆட்டு குட்டிகள் பாறையின் மேலே ஏறி நடுவில் சிக்கிக் கொண்டது அதை இறக்குவதற்கு முயற்சி செய்தும் எந்தவித பலனும் அளிக்காததால் மதுரை டவுன் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்துக்கு விரைந்த நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் அவர்களது உயிரை பயணமாக வைத்து பாறையின் இடத்தில் சிக்கிய 2 ஆட்டுக்குட்டியை பத்திரமாக மீட்டனர் இரண்டு ஆட்டுக்குட்டிகளையும் பத்திரமாக மீட்டு ஆட்டின் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர் நிகழ்வை கண்டு ஆட்டின் உரிமையாளர் தீயணைப்புத் துறையினருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர் தங்கள் உயிரை பணயமாக வைத்து ஆட்டை மீட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.