தண்ணீர் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் வந்த பிளஸ் 2 மாணவன் பலி

மதுரை வண்டியூர் ஐ சேர்ந்தஅன்புராஜ் மகன் அஸ்வின். பிளஸ் டூ மாணவரான இவர் அதெலடிக் விளையாட்டு வீரர். இன்று 29.09.19 காலை மைதானத்திற்கு பயிற்சிக்காக இவரது சகோதரனின் நண்பனுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற பொழுது மேலமடை அருகே வேகமாக வந்த மதுரை மாநகராட்சி தண்ணீர் லாரி மோதி ஏற்படுத்திய விபத்தில் அஸ்வின் விழுந்து காயம் அடைந்து அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலி. தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை. தப்பியோடிய மாநகராட்சி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!