பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி பெண், அரசின் உதவிக்காக காத்திருப்பு…

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளரிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முசுண்டங்கிரிபட்டியைச் சேர்ந்த மோகன் – கிருஷ்ணவேணி தம்பதிகளுக்கு ராஜலெட்சுமி, ரத்தின பிரபா என்ற இரு மகள்களும். ராஜமாணிக்கம் என்ற மகனும் உள்ள நிலையில்,இதில் மூத்த மகளான ராஜலெட்சுமிக்கு பிறந்ததில் இருந்து பார்வை குறைபாடு இருந்துள்ளது, இதனைத் தொடர்ந்து மதுரையில் உள்ள அரசு உதவிப் பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்புவரை படித்த நிலையில், விருதுநகர் மாவட்டம் நரிக்குடியைச் சேர்ந்த காசிவிஸ்வநாதன் என்பவருடன் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் ஆகி உள்ளது, இந்நிலையில் கணவர் காசிவிஸ்வநாதன் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்துக்கொண்ட நிலையில், ராஜலெட்சுமி பெற்றோர் அரவணைப்பில் வசித்து வருகின்றார்,இந்நிலையில் கூலி வேலை செய்து செய்து சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வரும் மோகன் தம்பதியினர், பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி மகளுடன் பெரிதும் சிரமத்துடன் குடும்பத்தினை நடத்தி வருகின்ற நிலையில், இந்த கொரோனா பரவல் காலத்தில் போதிய வேலை வாய்ப்பு இல்லாததால் பெற்றோர் பேரிதும் சிரமத்துடன் தன்னை பராமரித்து வருவதால் அவர்களுக்கு உதவிடும் வகையில், தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தங்களுடைய வாழ்வாதாரம் பாதுகாக்கும் வகையில் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!