உடனடி வாரிசு சான்றிதழுக்கு ரூ. 3500 லஞ்சம் பெற்ற இ- சேவை மைய பெண் .

தனியார் இ- சேவை மூலமாக பிறப்பு, இறப்பு, இருப்பிடம், வருமானம் உள்ளிட்ட பல்வேறுசான்றிதழ்களை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கென அரசு நிர்ணகிக்கப்பட்ட தொகை சான்றிதழுக்கு ஏற்றார் போல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.இந்தநிலையில் இ-சேவை மைய நிர்வாகிகளை அரசு அதிகாரிகள் பலருக்கு லஞ்சம் வாங்க ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த சாய் கிருஷ்ணன் என்பவருக்கு வாரிசு சான்றிதழ் தேவைப்பட்டதும் அவர் இணையதளம் மூலமாகவே வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முயற்சி செய்து மதுரை பழங்காநத்தம் பத்திர பதிவு அலுவலகம் எதிரே உள்ள தனியார் இ-சேவை மையத்திற்கு சென்று உள்ளார்.அப்போது அங்கு பணியில் இருந்த பெண் ஒருவர் உடனடியாக வாரிசுசான்றிதழ் வேண்டுமென்றால் அதற்காக ரூ 3500 லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு உள்ளார். அதற்கு சாய் கிருஷ்ணன் அந்த பணத்தை கொடுத்து உள்ளார்.இருந்தபோதிலும் வாரிசு சான்றிதழ் வழங்குவதில் இ சேவை மைய அதிகாரி கால தாமதம் ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.இந்த நிலையில் சாய் கிருஷ்ணன் இ-சேவை மைய பெண்ணிடம் வாக்குவாதம் செய்து உள்ளார்.அப்போது மேற்கண்ட இரண்டு பேர் இடையேயான வாக்குவாதத்தை அங்கு உள்ள ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத் தளத்தில் பரவ விட்டு உள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் நமது கீழை நியூஸ் செய்தித் தளத்தில் திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இ-சேவை மையத்தில் சரியான முறையில் இன்டர்நெட் வேலை செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்து உள்ளது தனியாருக்கு இ சேவை மையத்திற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் என செய்தி வெளியிட்டிருந்தோம் அருகே உள்ள தனியார் இ-சேவை மையத்தில் பதிவு செய்து உள்ளே கொண்டு வாருங்கள் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார் என செய்தி பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!