திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காஞ்சி ஸ்ரீ சீனிவாசா குபேர பெருமாள் மகாலட்சுமி கோயிலில் கொரோனா பாதிப்பில் இருந்து விலகவும், உலக நன்மைக்கான நிகும்பலா யாகம் நடைபெற்றது.இக் கோயிலில் சஞ்சீவி வேர் ஆஞ்சநேயர் அருள் பெற்ற முல்லை அம்மா தலைமையில் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி அம்மனுக்கு அமாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நிகும்பலா யாகம் நடைபெற்றது நிகும்பலா யாகம் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த யாகத்தில் கலந்துகொண்டு அம்பாளை சரனடைந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். ஆனி மாதம் அமாவாசையான கோயில் மண்டபத்தில் அம்பாளை எழுந்தருளச் செய்து பூஜைகள் நடத்தப்பட்டன. பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அருணகிரி செய்திருந்தார் காஞ்சி கிராமத்தை சுற்றியுள்ள பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு அருளைப் பெற்றனர் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது


You must be logged in to post a comment.