மதுரை பெட்ரோல் பங்க் ஊழியரிடம் 24 பவுன் நகை திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர் .நாகமலை புதுக்கோட்டை பாவலர் எஸ்டேட்டை சேர்ந்தவர் சிலம்பரசன் 31 .இவர், பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான நகையை ,அடகு வைத்து இருந்தார். அதை திருப்பிக் கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார் .அந்த நகையை, தான் ஓட்டிச் சென்ற பைக்கின் கவரில் வைத்திருந்தார். நாகமலை புதுக்கோட்டையில் உள்ள ஒரு ஜூஸ் கடை முன்பாக நிறுத்திவிட்டு, ஜூஸ் குடிக்க சென்றவர் பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, பைக்கில் வைத்திருந்த நகைகள் காணவில்லை .இதுகுறித்து, சிலம்பரசன் நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.