மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள செங்குன்றம், ஐயப்பன் கோவில் அருகே சங்கரபாண்டி என்பவரது மனைவி காவேரி (வயது65). இவர் தனது கணவன் இறப்பிற்குப்பின் தனது மூன்று மகன்களுடன் வசித்து வந்தார். பெற்ற பிள்ளைகள் அவரை சரிவர பார்க்காததால் நீண்ட நாட்களாக மன விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று மருத்துவமனையை அணுகி அங்கு சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே வந்து கொண்டிருந்தபோது கடையில் மண்ணெண்ணெய் வாங்கி விட்டு தனக்குத் தானே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.உடலில் தீப்பற்றி எரியத் தொடங்கிய நிலையில் அவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்க போராடினர். மேலும் இதுகுறித்து அவனியாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை காப்பாற்றிய போலீஸார் அவரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அவர் திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஓம் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த சங்கரபாண்டி என்பவரது மனைவி காவேரி (வயது 65) தெரிந்தது, காவேரி தனது உடலுக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதற்கு குடும்பப் பிரச்சினைகள் காரணமாக, அல்லது வேறு யாராவது அவரை கொலை செய்ய முயற்சி செய்தனரா என்ற கோணத்தில் அவனியாபுரம் போலீசார் விசாரணையைத் துரித படுத்தியுள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.