விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மதுரை சாலையில் மாயூரநாதசுவாமி திருக்கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இராஜபாளையம் பகுதியில் 42 வார்டுகளிலும் தற்போது பாதாள சாக்கடை திட்டம் பணிகள் நடைபெற்று வருகிறது. பாதாள சாக்கடையை தேக்கிவைக்க கோவில் பின்புறம் உள்ள பகுதியினை அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஸ்வ ஹிந்து பரிசத் மற்றும் இந்து முன்னணி மற்றும் சமூக ஆர்வலர்கள் அமைப்பினர் திட்ட பணிகள் குறித்து ஆய்விற்கு வந்த மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி மற்றும் வட்டாச்சியரிடம் கோவில் தேர் வலம் வரும் பாதையாக உள்ளதால் இந்த பகுதியில் கழிவுநீர் தொட்டி அமைக்க கூடாது எனவும், வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் வேறு இடத்தில் அமைக்க ஆய்வு செய்வதாக உறுதி அளித்த பின் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணபட்டது.
செய்தியாளர் வி காளமேகம்


You must be logged in to post a comment.