விலைவாசி உயர்வை கண்டித்து வருகிற வருகிற 5-ம் தேதி தேமுதிக சார்பாக தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்: பிரேமலதா விஜயகாந்த் மதுரையில் பேட்டி.

உடல்நலக்குறைவால் மறைந்த தேமுதிக நிர்வாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரை சென்னையிலிருந்து விமானம் மூலம்மதுரை வந்த தேமுக மாநில கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:-பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் மற்றும் மின் கட்டணம் , அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளிட்ட எல்லாப் பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.இந்த விலைவாசி உயர்வு பொது மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.எனவே தேசிய முற்போக்கு திராவிடக் கட்சி சார்பாக இதனை கண்டித்து அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஜூன் 5ஆம் தேதி நடைபெறுகிறது அரசியலில் வெற்றி தோல்வி என்பது சகஜம் தேமுதிகவை பொருத்தவரையில் வெற்றியை கண்டு ஆணவப்படுவதோ , தோல்வியை கண்டு துவண்டு போக கட்சி அல்ல. வலுவான கட்டமைப்புகளை உள்ளடக்கிய வலுவான கட்சி தேமுதிக.மேலும் தேமுதிக கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு நிறைய பணிகளை செய்து கொண்டிருக்கிறோம்.எங்கள் திருமணம் கலைஞர் தலைமையில் நடைபெற்றது இந்த உலகத்துக்கே தெரியும்.தமிழக முதல்வர்ஸ்டாலின் உடனான நட்புறவு என்றைக்குமே இருக்கும்.ஸ்புட்னிக் தடுப்பூசி பற்றிய ஆய்வில் முடிவு திருப்திகரமாக இருக்கலாம்.இது பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது. தமிழக அரசு எடுக்க வேண்டிய முடிவு இது.நமது நாட்டிற்கு நாட்டு மக்களுக்கு எந்தத் தடுப்பூசி வேண்டும் என்பதை அரசாங்கம் தான் முடிவு செய்ய வேண்டும்.சசிகலா அதிமுக நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசுவது அக்கட்சியின் தனிப்பட்ட விஷயம் அதுபற்றி நான் கருத்து சொல்ல முடியாது. அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.முதலில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்த பின்பு கட்சியின் ஆலோசனை கூட்டம் கூட்டி தேமுதிக கட்சியின் நினைய தலைமை அறிவிக்கும் என்று தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!