புதிய சாலைப் பணிகளுக்கான பூமி பூஜை தொடங்கி வைப்பு:

மதுரை அருகே திருப்பரங்குன்றத்தை அடுத்த நிலையூரில், ரூ.40 லட்சத்தில் புதிய சாலைப் பணிகளை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா புதன்கிழமை தொடங்கி வைத்தார். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி நிலையூர் பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில், புதிய சாலை அமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.அதனடிப்படையில், நிலையூர் கைத்தறி நகர், நிலையூர் 1 பிட் காலனி, ராதாகிருஷ்ணன் காலனி உள்ளிட்ட நான்கு இடங்களில் தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு ,ஒன்றிய ச் செயலாளர் நிலையூர் முருகன் தலைமை வகித்தார்.இளைஞரணி மாவட்டச் செயலாளர் வக்கீல் ரமேஷ் முன்னிலை வகித்தார்.ஒன்றியக்கவுன்சிலர் சாந்தி கோபாலாச்சாரி வரவேற்றார்.நிகழ்ச்சியில், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ,புதிய சாலை பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், நிலையூர், கைத்தறி நகர் உள்ளிட்ட பகுதி மக்களை நேரடியாகச் சென்று சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார். இப்பகுதி மக்கள் புதிய சாலை அமைத்து தரவும்,குடிநீர் வசதி கேட்டும் அவரிடம் மனுக்கள் கொடுத்தனர்.விரைவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து நடவடிக்கை எடுப்பதாக, ராஜன் செல்லப்பா எம்எல்ஏ உறுதி அளித்தார்.இந்த நிகழ்ச்சியில், திருப்பரங்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆஷிக்,பிரம, மற்றும்அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில துணைச் செயலாளர் வி எஸ் பூமிபாலன், திருப்பரங்குன்றம் பகுதி துணைச் செயலாளர் செல்வகுமார், ஒன்றியக் கவுன்சிலர் சாந்தி கோபாலாச்சாரி, ஊராட்சி செயலாளர் சேது, கிளைச் செயலாளர்கள் ஆலடி போஸ், கிருஷ்ணன், நிர்வாகிகள் வி ஆர் ராஜ்மோகன், தோப்பூர் பால்பாண்டி, இளைஞரணி பார்த்திபராஜா, புருஷோத்தமன், கருப்பு மாரி, முருகன் ஒப்பந்ததாரர் மணவாளன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!