திருப்பரங்குன்றம் பகுதிகளில் சசிகலாவிற்கு ஆதரவாக அதிமுகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு .

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் பகுதியில் மதுரை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் சசிகலாவிற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டது.இதனால் அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பரங்குன்றம் ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளரும், மதுரை மாவட்ட கவுன்சிலருமான லட்சுமி ராஜன் சசிகலாவிற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டி உள்ளார் .இது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த வாரம் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் எம் எல் ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் சசிகலாவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அவருடன் தொடர்பு கொள்பவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது .அதற்கு பதிலடியாக சசிகலா ஆதரவாளர்கள் அதிமுக சசிகலாவுக்கு என போஸ்டர் ஒட்டியது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து லட்சுமி பதிவிராஜன் குறிப்பிடுகையில் புரட்சித்தலைவர், எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வளர்த்த கட்சியினை அவர்களுக்கு பின் சின்னம்மா தான் வழி நடத்தி வந்தார். முதலமைச்சர் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோருக்கு பதவிகளை தந்தவர். இன்று சந்தர்ப்பவாத சுயநலவாதிகள் சசிகலா தலைமை ஏற்க மறுக்கின்றனர். மேலும் இரட்டை தலைமையினால் தொண்டர்கள் இடையே பெரும் குழப்பம் மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் நாடாளுமன்ற தேர்தல் உள்ளாட்சி தேர்தல் சட்டமன்ற தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் தொடர் தோல்வியை அதிமுக சந்தித்தது இரட்டை தலைமையினால் தான்ஒன்றரை கோடி தொண்டர்களின் உண்மையான அதிமுக சசிகலா தலைமையில் தான் உள்ளோம் .மேலும் பொதுச்செயலாளர் குறித்து வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது ஆகையால் சின்னம்மா அவர்களின் பக்கமே அதிமுக உள்ளது என கூறினா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!