மதுரை மாவட்ட காவல்துறைக்கு புதியதாக 19 இரு சக்கர வாகன ரோந்துப் பணிக்காக பயன்படுத்தப்படுகின்றன.மதுரை மாவட்ட ஆயூதப் படை மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் காமினி, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.இது குறித்து, மதுரை மாவட்ட போலீஸ் எஸ்.பி. பாஸ்கரன் கூறியது:மதுரை மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கவும், புகார்களை உடனடியாக சென்று விசாரிக்கவும், ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தும் தற்காக, இதுவரை இருந்து இரு சக்கர ரோந்து வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன.மேலும், குற்றச் செயல்களை தடுக்கும் நோக்குடன், அரசு சார்பாக 19 புதிய இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தி திட்டமிடப்பட்டு, இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளன.மதுரை மாவட்டத்தை பொறுத்த வரை இனிமேல் 39 இரு சக்கர ரோந்து வாகனங்கள், குற்றத் தடுப்பு பணிகளில் பயன்படுத்தப்படும் என்றார்.இந்த நிகழ்ச்சியில், துணைக் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், மதுரை ஆயூதப்படை காவல் ஆய்வாளர் விஜயகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.