மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சி மன்றம் கச்சைகட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தமிழக அரசின் உத்தரவின்படி, கொரோனா நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இரும்பாடி ஊராட்சி சுகாதார வளாகத்தில் நடந்த முகாமிற்கு, ஊராட்சித் தலைவர் ஈஸ்வரி பண்ணைசெல்வம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பிரியா சேகர் ஊராட்சி செயலர் காசிராமன் துவக்கினார்.முன்னாள் ஊராட்சித் தலைவர் பண்ணைசெல்வம் முன்னிலை வகித்தார். கச்சகைகட்டி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் செல்வராஜ், தலைமையில், மருத்துவக் குழுவினர் செவிலியர்கள் 45 வயதிற்கு மேற்பட்ட 200 பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.இதில், வார்டு உறுப்பினர்கள் சுகாதார ஆய்வாளர்கள் ராதாகிருஷ்ணன், டார்வின், செவிலியர்கள் கலா பேச்சி மற்றும் திலீபன் சுகாதார பணியாளர்கள் தூய்மை காவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதைப்போன்று அலங்காநல்லூரில் நடந்த தடுப்பூசி முகாமில்புதுப்பட்டி கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு மருத்துவமனையும், அரிமா சங்கமும் இணைந்து புதுப்பட்டி கிராமத்தில் கெரானா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.இதில், ஊராட்சி மன்றத் தலைவர்.பரந்தாமன் தலமையில் அரிமா சங்கத் தலைவர் நடராஜன் , செயலாளர் பிரபாகரன், பொருளாள் சோமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வட்டார மருத்துவர் டாக்டர் வளர்மதி, முகாமை தொடக்கிவைத்தார். இதில், சுகாதார ஆய்வாளர்கள்/மண ராமார், அரிமா ரகுபதி, முரளிதரன் ஆதிமூலம, ஜெயராம் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக் கவுன்சிலர் சுப்பா ராயலு .உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.