மதுரை திருமங்கலம் அருகே காரை திருடி போலியான முறையில் ஆவணங்கள் தயார்செய்து விற்பனையில் ஈடுபட்ட ஏழு பேர் கைது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட ஆஸ்டின்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் தமிழரசன்-புஷ்பவள்ளி தம்பதியினர். தமிழரசன் கடந்த 2015ஆம் ஆண்டு தனது மனைவி புஷ்பவள்ளியின் பெயரில் வெள்ளை நிறத்தில் TN 57 M 1771 என்ற எண் கொண்ட ஸ்கார்பியோ காரை வாங்கியுள்ளார். இந்நிலையில் மதுரை கப்பலூர் சிட்கோவில் உள்ள மகேந்திரா கார் கம்பெனியிலிருந்து சில நாட்களுக்கு முன்பு தமிழரசனின் கைபேசி எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வளர்ந்துள்ளது.அந்தத் தகவலில் தமிழரசனின் மனைவியின் பெயரிலான மேலே குறிப்பிட்டுள்ள TN 57 M 1771 என்ற வாகனம் சர்வீஸ்க்கு கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழரசனின் கார் ஆனது அவரது வீட்டில்தான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது ஆகவே இந்த குறுஞ்செய்தியை கண்டு அதிர்ச்சியடைந்த தமிழரசன் உடனடியாக சந்தேகத்தின் பேரில் இதுகுறித்து ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்திற்கு இணையம் வாயிலாக புகார் ஒன்றினை அளித்துள்ளார்.தமிழரசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருமங்கலம் துணை காவல் கண்காணிப்பாளர் வினோதினியின் வழிகாட்டுதலின்படி ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் சதீஷ், செல்வ சுப்பிரமணியம், பாரதி, செல்லப்பா, அசோக்குமார், ஆரீப், சுரேஷ் ஆகிய ஏழு பேரும் நூதன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.இதனை அடுத்து அவர்களை கைது செய்து விசாரித்தபோது முதற்கட்ட தகவலாக இவர்கள் கார் அல்லது காரின் ஆர்சி புக் இவற்றில் ஏதாவது ஒன்றை முதலில் திருடி விடுவதாகவும், பின்னர் திருடி வரப்பட்டது கார் என்றால் அதற்கு ஏற்றார் போல ஆர்சி புக் யை தயார் செய்து விற்பனை செய்துவிடுவது, அல்லது திருடியது ஆர்சி புக் என்றாள் அதற்கு ஏற்றார் போல அதே நிறுவன காரை திருடி போலியாக காரின் எண் நிறம் மற்றும் என்ஜின் சேஸ் நம்பர் ஆகியவற்றை அந்தக் காரில் உருவாக்கி விற்பனை செய்துவிடுவது என்று நூதனமாக கார் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.தற்போது இவர்களிடமிருந்து இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தினர் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!