போலி ரசீது மூலமாக பார்க்கிங் கட்டணம் வசூலா?

மதுரை மாநகராட்சி பெயர் பொறிக்கப்பட்ட சீல் தேதி கையெழுத்து ஏதும் இல்லாமல் போலியான ரசீதை தயாரித்து பேலஸ் ரோடு மஹால் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்து வாசன் டிபன் வரையிலுள்ள இருசக்கர நான்கு சக்கர வாகனங்களுக்கு அடாவடியாக பார்க்கிங் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது மேலும் இவர்கள் கட்டாயப்படுத்தி வசூலில் ஈடுபட்டு வருவதாகவும் கொடுக்கும் மறுக்கும் நபர்களை குண்டர்கள் போல் மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது தற்பொழுது கொரொண ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தினால் கடந்த சில ஆண்டுகளாகவே எந்த ஒரு இடத்திலும் மாநகராட்சி சார்பாக பார்க்கிங் கட்டணம் ஏலம் நடத்தப்படவில்லை என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார் அப்படி இருக்கும்போது இவர்கள் யார் ஆதரவுடன் வசூல் செய்கிறார்கள்????? குண்டர்கள் போல் நபர்கள் மீது மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளும் கடுமையான நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் மாநகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பார்களா ?????

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!