மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் அமைந்துள்ள பால மீனம்பிகை- கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வாசலில் குறைந்தளவு உறவினர்களை கொண்டு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.கொரோனா தொற்று காரணமாக அனைத்து திருமண மண்டபங்களும், கோயில்களும் திறக்கப்படாமல் உள்ளது.இதனால் தமிழகத்தில் அனைத்து சுப நிகழ்ச்சிகளும் கோவில் வளாகத்திற்கு வெளியே நடைபெற்று வருகிறது.அதன் தொடர்ச்சியாக மதுரை திருப்பரங்குன்றம் தாலுக்கா அவனியாபுரத்தில் அமைந்துள்ள பாண்டியர் காலத்திய 6ம் நூற்றாண்டை சேர்ந்த பாலமீனாம் பிகை – கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் வாசலில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.கொரோனா தொற்று காரணமாக குறைந்த அளவு உறவினர்கள் கொண்டு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.