திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள ஸ்தல மரத்தில் இஸ்லாமியர்கள் சந்தனக்கூடு திருவிழாவின்போது, ஏற்றப்பட்ட கொடியை இறக்க வலியுறுத்தி அனைத்து இந்து இயக்கங்கள் சார்பாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று வருவாய் கோட்டாட்சியர் , மற்றும் வட்டாட்சியர், சர்வேயர்கள் , மற்றும் காவல் உதவி ஆணையர் திருப்பரங்குன்றம் கோவில் பொறுப்பு துணை ஆணையர் மு. ராமசாமி மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் மலை உச்சியில் சென்று ஆய்வு செய்தனர் .மற்றும் குதிரை சுனை பள்ளிவாசல், காசி விஸ்வநாதர் ஆலயம், நெல்லித்தோப்பு ஆகிய பகுதிகளையும் ஆய்வு செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.