மதுரையில் கோவிலுக்கு தங்கம் வேண்டும் என கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்த தனிப்படை போலிசார்.

மதுரை மேல வெளி வீதி பகுதியை சேர்ந்த அழகப்பன் என்பவரிடம் வாடிப்பட்டியில் உள்ள முருகன் கோவிலில் திருப்பணி நடைபெறும் நிலையில், கோவிலுக்கு தலா 1 பவுன் எடையுள்ள 5 தங்க காசுகள் வேண்டும் என்று கூறி அதனை வாடிப்பட்டிக்கு எடுத்துவர சொல்லிவிட்டு புறப்பட்டுள்ளார்.இதையடுத்து 5 தங்க காசுகளையும் எடுத்துசென்ற போது திடிரென அழகப்பனை தொடர்புகொண்ட மெய்யப்பன் அவரின் கணக்குப் பிள்ளை கருப்பையாவிடம் 1 பவுன் எடையுள்ள 5 தங்க காசுகளை கொடுக்குமாறு கூறி அதற்குண்டான பணத்தினை வாடிப்பட்டியில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு கூறியதால்,கருப்பையாவிடம் தங்க காசுகளை கொடுத்துவிட்டு வாடிப்பட்டி சென்று மெய்யப்பனை தொடர்பு கொண்ட போது அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது.இதையடுத்து அழகப்பன் அளித்த புகாரையடுத்து தனிப்படை அமைத்து இருவரையும் தேடவந்த நிலையில், நேற்று அருணாச்சலம் மற்றும் வரதராஜன் ஆகிய இருவரையும் சந்தேகத்தின் அடிப்படையில் போலிசார் விசாரித்தபோது கும்பலாக இணைந்து மோசடி செய்ததை ஒப்புக்கொண்ட நிலையில்,இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 1 பவுன் எடையுள்ள 5 தங்க காசுகள் (5 பவுன்) பறிமுதல் செய்தனர். இதற்கு மதுரை மாநகர் காவல் ஆணையர் தனிபடையினரை பாராட்டியதுடன் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகவுள்ள மெய்யப்பன் மற்றும் கருப்பையா ஆகிய இருவரையும் உடனே கைது செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!