ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் இந்திராநகர் பகுதியில் ஜோசப் என்பவர் வீட்டில் 6.1 /2 பவுன் நகை, 3 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை.

ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் இந்திரா நகர் பகுதியில் மின் வாரியத்தில் பணிபுரியும் ஜோசப் என்பவர் வசித்து வருகிறார். ஜோசப் மனைவி விஜயா- வின் உடல்நிலை சரியில்லாததால் நேற்று இரவு வீட்டைப் பூட்டிவிட்டு அருகில் இருந்த தாய் வீட்டிற்கு சென்று தங்கி உள்ளனர். இந்நிலையில் இன்று காலை வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது உள்ளே வைக்கப்பட்டிருந்த 6.1/2 பவுண் தங்க நகை மற்றும் 3000 ரூபாய் பணம் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து ஜோசப் மனைவி விஜயா அளித்த புகாரின் பேரில் சேத்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோப்பநாய் ராக்கி மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் திருட்டில் சம்மந்தபட்ட குற்றவாளியை தேடி வருகின்றனர்.மேலும் கதவு மற்றும் பீரோவை உடைக்காமல் நகை திருடு போனதால் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!