மதுரை விஸ்வநாதபுரம் ரோட்டரி ஹாலில் கொரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது .45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது இந்நிகழ்வினை, ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் குமணன் தொடங்கி வைத்தார்.மதுரை அனைத்து ரோட்டரி சங்கங்களின் தலைவர் ஞான குகன் செயலாளர் மாதவன் பிரபு அழகப்பன் மதுரை ரோட்டரி சங்க த் தலைவர் ஆண்டனி பிரேம்குமார் மதுரை ரோட்டரி சங்க தலைவர் ராமமூர்த்தி தெற்கு ரோட்டரி சங்க தலைவர் கணேசன் மற்றும் அரசு தடுப்பூசி மேலாளர் ராஜேந்திரன் உதவி ஆளுநர் சாந்தாராம் ரோட்டரி மாவட்ட செய்தி தொடர்பாளர் நெல்லை பாலு, உதவி ஆளுநர் தேர்வு ரமேஷ் , அன்வர் பாட்சா உட்பட பலர் பங்கேற்றனர்.இன்று ஐநூறுக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர் .முகாமானது,சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடபெறும்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.