மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூன்று வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்துள்ளது இதுகுறித்து அப்பகுதி மக்கள் மதுரை மேலூர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை
அதிகாரிகள் கம்ப குடியான் புள்ளிமானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது மோதிய வாகனம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர் இறை அல்லது குடிநீருக்காக தேசிய நெடுஞ்சாலையை கடந்து இருக்கலாம் எனவும் இதனால் இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது மேலும் மோதிய வாகனத்தை அப்பகுதியில் ஏதேனும் சிசிடிவி காட்சிகள் இருக்கிறதா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.