மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வணிகர் சங்க பிரதிநிதிகள் மற்றும் வணிகர்களுடன் துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து வணிக வரித்துறை & பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் நிதி அமைச்சர்
பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.இந்த கூட்டத்தில் வணிக வரித்துறை முதன்மை செயலாளர் சித்திக், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி பேசும்போது,11 ஆண்டுகளுக்கு பின்னர் வணிக பிரதிநிதிகளை அழைத்து பேசி உள்ளோம்.போலியாக வணிக உரிமம் பெற்று இயங்கும் நிறுவனங்களை வணிகர்கள் யாரும் ஆதரிக்க கூடாது.போலி நிறுவனங்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.வணிகர்கள் தங்கள் புகார்களை துறை சார்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவிப்பதற்காக எண்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன.வணிகர்கள் புகார் அளிப்பதற்காக பிரத்யேக புகார் எண்களுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை திறப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தபட்டு வருகிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.