பதிவு அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை தொடக்கம்: அமைச்சர் மூர்த்தி தகவல்:

தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திர பதிவு அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது என, தமிழக வணிகவரி மற்றும் பத்திர பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்தார். மதுரை ராசா முத்தையா மன்றத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை, அமைச்சர் பி. மூர்த்தி தொடங்கி வைத்து பேசியது:தமிழகத்தில் உள்ள 575 பத்திர பதிவு அலுவலகங்களில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனையின் பேரில், கட்டுப்பாட்டு அறை தொடங்கி வைக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகவும், பொதுமக்கள், இனி மேல் பத்திரபதிவு தொடர்பான புகார்களை, 94984- 52110, 94984- 52120, 94984- 52130 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம் என்றும், அதன்மேல் துரித நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், கொரோனவைக் கட்டுப்படுத்த அரசானது பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், மதுரையில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது என்றார். இந்த நிகழ்ச்சியில், மதுரை மாநகராட்சி நகர் நல அலுவலர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!