மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி பகுதியில் உள்ள ஓம் சக்தி நகர் 3வது குறுக்கு தெரு அருகே வாலிபர் ஒருவர் தலை நசுங்கி இறந்ததாக அவனியாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிந்தது.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அவனியாபுரம் போலீசார் முதல் கட்ட விசாரணையில் சிந்தாமணி பகுதியை சேர்ந்த அர்ஜுனன் மகன் முத்துக்குமார் ( வயது 35 )என்று தெரிய வந்தது.இவர் கீரைத்துறை பகுதியில் பட்டறையில் வெல்டிங் வேலை செய்து வருவதாக முதல் கட்ட விசாரணை தெரிந்து இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். …..(2) இதேபோன்று டாஸ்மாக் திறந்த நாளன்று நண்பர்களால் இளைஞர் படு கொலைமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறந்த முதல் நாள் அன்றே மது போதையில் நண்பர்களால் கொலை செய்யப்பட்ட இளைஞர் பரிதாபம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் மனோகரன் மகன் விக்கி என்ற விக்னேஷ்வரன் (28) இவரும் இவரது நண்பர்கள் மூன்று பேரும் நேற்று அரசு டாஸ்மாக் திறக்கப்பட்டதால் அங்கு மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு முள்ளிப்பள்ளம் அருகே உள்ள தென்னந்தோப்பில் நண்பர்களுடன் மது அருந்திய போது குடி போதை தலைக்கேறியதும் நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது அதில் அவர்களுக்குள் சண்டை உண்டானது அப்போது கற்கல் மற்றும் கத்தியால் தாக்கிய ரத்த காயம் உண்டானது இந்த சம்பவத்தில் பலத்த காயம் உண்டானதால் விக்னேஷ் இறந்து விட்டார் இதனை பார்த்த நண்பர்கள் தப்பி ஓடிவிட்டனர் இதுகுறித்து சமயநல்லூர் டிஎஸ்பி ஆனந்த் ஆரோக்கியராஜ் சோழவந்தான் இன்ஸ்பெக்டர் ராஜசுலோச்சனா காடுபட்டி எஸ் ஐ க்கள் மாரி கண்ணன் அருண்பாண்டி மற்றும் போலீசார் விக்னேஷ் பிரேதத்தை எடுத்து சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பினர் பின்னர் விசாரணை செய்கையில் மது போதையில் நண்பர்கள் தாக்கப்பட்டதில் விக்னேஷ் இறந்துவிட்டதாகவும் தப்பி ஓடிய நண்பர்களை போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தேடி வருகின்றனர் இதில் நண்பர்களான ஐயர் மனோகரன் மகன் கார்த்தி பிச்சை மகன் வைரமணி திருப்பதி மகன் வேல்முருகன் ஆகிய நண்பர்கள்தான் தாக்கியவர்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது இந்த கொலை தொடர்பாக முள்ளிப்பள்ளம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரே நாளில் மதுரை மாநகர் மற்றும் புறநகரில் இரு கொலைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.