கள்ள சந்தையில் சாராயம் காய்ச்சுவது போன்றவை நடைபெறாமல் இருப்பதற்காக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் திறக்கப் பட்டது.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தது போல அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாம் தவணையாக பாதிப்பு நிவாரண உதவித் தொகை ரூபாய் 2000 மற்றும் 14 வகையான பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்புகளை தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மதுரை, திருப்பரங்குன்றம் பெருங்குடி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கினார்.தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் கூறுகையில்:எதிர்க்கட்சியினர் தற்போது ஆக்சிஜன் படுக்கைகள் இல்லை பற்றாக்குறை நிலவுகிறது என குறை கூறி வருகின்றனர். ஆனால் தமிழக அளவில் முன்கூட்டியே மூன்றாவது அழைக்கும் முன்னெச்சரிக்கையாக செய்யப்பட்டுள்ளது என கூறினார்.நேற்று மதுக்கடைகளை திறந்த போது தமிழக முதல்வர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகள் திறக்கப்பட்டது, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் அவர்கள் கூறியதைப் போல கள்ள சந்தையில் சாராயம் காய்ச்சுவது போன்றவை நடைபெறாமல் இருப்பதற்காக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மற்ற மாநிலங்களை விட கடுமையான கட்டுப்பாடுகளுடன் திறக்கப் பட்டது.கடந்த ஆட்சியில் எந்த அளவிற்கு நிதி நிலைமையை மோசமாக விட்டுச் சென்றிருக்கிறார்கள், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்களுடைய உயிர்தான் முக்கியம் என்று நம்முடைய முதல்வர் அவர்கள் இந்த அளவிற்கு நடவடிக்கை எடுத்தார்.வெளிமாநிலங்களில், வெளிநாடுகளில் இருந்து கொரோனா சிகிச்சைக்கு உபகரணங்கள் பெற்றுத் தந்திருக்கிறார். ஓரளவிற்கு நிம்மதியாக மக்கள் வாழக்கூடிய நிலைமையை உருவாக்கித் தந்திருக்கிறார்.தற்போது தமிழக முதல்வர் இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு முதல்வருக்கு எல்லாம் ஒரு எடுத்துக்காட்டாக ஒரு எளிமையான முறையில் நடத்திசென்று கொண்டிருக்கிறார.

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!