திருப்பரங்குன்றம் -முத்தம் கொடுத்து மது பாட்டிலை பெற்ற குடிமகன்கள்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பகுதிகளில்பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்று முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது.கொரோனா பெருந்தொற்று 2வது அலை காரணமாக ஓரு மாதத்திற்கும் மேலாக மூடிய டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத நிலையில் இன்றுமுதல் காலை 10.00 மணிக்கு தொடங்கி மாலை 5.00 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் இன்று காலை 10 மணி முதலே மதுபாட்டில்களை வாங்குவதற்கு மதுப் பிரியர்கள் அதிகளவு குவிந்து வருகின்றனர்.டாஸ்மாக் கடைகளுக்கு வருகை தரும் மதுபிரியர்களுக்கு சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்கு, கிருமிநாசினி கொண்டு சுத்திகரிக்க என பாஸ்மார்க்கு 2 நபர் போடப்பட்டு, அவர்கள் மூலம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்தி வருகின்றனர், கைகளை சுத்திகரிக்க சனிடைசர்களும் வழங்கப்பட்டு வருகிறது.ஒரு மாதத்திற்கும் மேலாக மது பிரியர்களுக்கு மதுபான பாட்டில்கள் கிடைக்காததால் இன்று ஆவலுடன் மது பிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுபான பாட்டில்களை வரிசையில் நின்றும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் வாங்கி செல்கின்றனர்.தற்போது மதுப்பிரியர் ஒருவர் மதுபான பாட்டில்களை வாங்கி அதற்கு முத்தம் கொடுத்து தனது பரவசத்தை வெளிப்படுத்தினார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!