மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் கஞ்சா விற்பதாக வந்த தகவலையடுத்து மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் அவனியாபுரம் பகுதியில் தீவிர சோதனை செய்தனர்.
அப்போது அவனியாபுரம் திருப்பதி நகரில் வசிக்கும் பாண்டி என்பவரது மகன் அருண் குமார் (வயது 32 ) மற்றும் அவரது நண்பர்கள் ஆட்டோ மற்றும் டூவிலரில் வந்தனர்.அவர்களிடம் தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டதில் 240 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.இதில் முக்கிய குற்றவாளியான அருண்குமார் என்பவர் தப்பி ஓட்டம் மீதமுள்ள 4 பேரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் .மேலும் கஞ்சா கொண்டு வந்த ஆட்டோ மற்றும் 2 சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.அருண்குமார் மீது அவனியாபுரம் , கீரைத் துறை காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது…
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.