திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஏழை எளிய மக்கள் 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகள்:

கடந்த 3 ஆம் தேதி அன்று திமுக முன்னால் தலைவர் கலைஞரின் 98 – வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக முதல்வர் அவர்களின் ஆணைககிணங்க பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுக மற்றும் பல்வேறு அமைப்பினர் நலத்திட்ட உதவிகள் கொரோனா நிவாரண ப் பொருட்கள் மற்றும் அன்னதானம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன அதேபோல், மதுரை மாநகர் திமுக சார்பில் கொரோனா நிவாரணமாக ஏழை எளிய மக்கள் 1500 நபர்களுக்கு அரிசி காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மதுரை வடக்கு மாவட்ட கழக செயலாளர் பொன் முத்துராமலிங்கம் உத்தரவின்பேரில், மதுரை மாநகர் மாவட்ட திமுக கழகத்தை சேர்ந்த ஷாகுல் ஹமீது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக மற்றும் மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பொதுமக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பலர் நலத்திட்ட உதவிகள் வாங்கிச் சென்றனர் திமுக கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!