மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுக்கா பாம்பன் நகர் பகுதியில் வசித்து வருபவர் கீர்த்தனா (வயது 24) இவர் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.இவர் பிறந்த சில நாட்களிலேயே தாய் இறந்த நிலையில் தந்தையின் வளர்ப்பில் வளர்ந்து வந்தார், இவருக்கு பத்து வயதானபோது தந்தையும் இறந்ததால் இவருடைய தாத்தா பாட்டி வீட்டில் தங்கி படிப்பைத் தொடர்ந்து வந்தார்.பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு தொடர்ந்து திருப்பூரில் உள்ள அரசு நர்சிங் கல்லூரிக்கு தனது அத்தையின் உதவியுடன் படித்து வந்த நிலையில் அவருக்கு, நடந்தது மற்றொரு சோகம் கல்லூரி இறுதி ஆண்டில் கல்லூரியில் ஏற்பட்ட சிறு காயம் சிகிச்சைக்கு பணமின்றி நாளடைவில் புற்றுநோயாக உருவாகியது.இதனை பல முறை உறவினர்களின் உதவியுடன் சிகிச்சை எடுத்தும் பலன் இல்லாததால் கடைசியில் மருத்துவரின் ஆலோசனைப்படி அவருடைய இடது காலை எடுக்க நேரிட்டது.
ஏற்கனவே பல துயரத்தில் இருந்து வந்த கீர்த்தனா செயற்கை கால் வைக்க மிகவும் சிரமப்பட்டு வந்தார்.இந்த நிலையில்தான் தனியார் மருத்துவமனை மருத்துவரின் உதவியுடன் செயற்கைக்கால் பொருத்தப்பட்டு அங்கேயே வேலை செய்து வந்தார்.இந்தக் கொரோனா காலகட்டத்தில் தொற்றுபரவி விடுமோ என்ற பயத்தில் பலர் உள்ள நிலையில் தானாக முன்வந்து கொரோனா நோயாளிகளுக்கு பணிபுரிய முன்வந்துள்ளார். கீர்த்தனா .மாற்றுத்திறனாளி கீர்த்தனாவின் சேவைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகின்றனர்.இவர் அரசு மருத்துவமனையில் கொரோனா காலகட்டத்தில் ஒப்பந்த பணிபுரிய வாய்ப்பு கிடைக்குமா என முயற்சி செய்தும், கிடைக்கவில்லை.ஏழ்மையில் வாடும் மாற்றுத்திறனாளி செவிலியருக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்பது மாற்று திறனாளி செவிலியரின் கீர்த்தனாவின் கோரிக்கையாக உள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.