அவனியாபுரத்தில் தமிழக அரசு பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நிதி உதவி வழங்க கோரிக்கை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளது.இங்கு பார்வையற்றவர்கள் சுமார் 80க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.கடந்த கரோன காலத்தில் தமிழக அரசு நிதி உதவி வழங்கியது போல் தற்போது நிதி உதவி வழங்க கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதால் உதவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.இவர்கள் பேருந்துகள்,இரயில் நிலையங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் வியாபாரம் செய்து பிழைத்து வந்தனர்.தற்போது கரோன 2வது அலை காலம் என்பதால் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வேலை வாய்ப்பின்றி வறுமையில் வாடும் சூழ்நிலையில் உள்ளதால் தங்களது வாழ்வாதாரம் இல்லாததால் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டும் என்று முதல்வருக்கு மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!